தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா : தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை.. மீறினால் கடும் நடவடிக்கை என மாநகராட்சி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 10:59 am
Chennai Corp - Updatenews360
Quick Share

கொரோனா சிகிச்சை பெறுவோரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 295 பேர், செங்கல்பட்டில் 122 பேர், கோவையில் 31 பேர் உள்பட 26 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி இருந்தது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 25 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 94 முதியவர்களுக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன்படி சென்னையில் கொரேனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தால், அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினால் தகவல் அளிக்க வேண்டும் என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 444

0

0