கழிவறையில் சடலமாக கிடந்த கொரோனா நோயாளி: அதிர்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள்…!

10 May 2021, 10:33 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் அனாதையாக கழிவறையில் இறந்து கிடந்த சம்பவத்தால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைகாகப் ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை, சரியாக உணவும் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இருவர் ஒருவர் கொரோனா சிகிச்சை மையத்தின் கழிவறையில் இறந்து கிடந்ததால் பொதுமக்களுடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் வார்டின் கடைசிப் பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் அவர் இறந்து கிடக்கிறார். கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவே பொதுமக்கள் பயப்படுவதாகவும், இது குறித்து தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பு அதிகமாக ஆகும் எனவும், இதனை கவனத்தில் கொண்டு தமிழகஅரசு செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 151

0

0