பிளாஸ்மா தானம் : கோவையில் கொரோனாவில் இருந்து 16 பேர் குணம்!!
11 September 2020, 3:46 pmகோவை : கோவை அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 15 கொடையாளர்கள் அளித்த பிளாஸ்மா தானத்தால் 16 கொரோனா நோயாளிகள் குணமடைந்த நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பிளாஸ்மா வங்கியை துவக்கி வைத்தனர்.
இதில் துவங்கபட்ட நாளில் இருந்து நேற்று மாலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த -15 தன்னார்வ கொடையாளர்கள் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். தொடர்ந்து இவர்களிடமிருந்து பெறப்பட்ட கன்வலசன்ட் பிளாஸ்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 16 பேருக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுக்கு உள்ளான ஒரு வாரத்திற்குள் குறைந்த அறிகுறிகள் இருக்கும் போதே கன்வலசன்ட் பிளாஸ்மா செலுத்தப்பட்டால் நோயாளிகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0
0