அதிகம் பாதிப்புக்குள்ளான திருவள்ளூர், கோவை, செங்கல்பட்டு : மற்ற மாவட்டங்களின் விபரம்!!

20 August 2020, 6:14 pm
corona Cbe -Updatnews360
Quick Share

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 5986 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 450 ஆக உள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மவாட்டங்களில் இன்று பாதிப்பு அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 5 ஆயிரத்து 742 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

திருவள்ளூரில் இன்று 393 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 291 பேருக்கும் , கோவையில் 397 பேருக்கும், கடலூரில் 340 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தேனியில் 233, திருவண்ணாமலையில் 109, திருப்பத்தூரில் 84 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.