கிடுகிடுவென உயரும் கொரோனா… தமிழகத்தில் இன்று 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு

Author: kavin kumar
7 January 2022, 9:15 pm
Delta Plus Corona - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 6,983 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,998 அதிகரித்து 8,981 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27லட்சத்து 76 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 30ஆயிரத்து 817ஆக அதிகரித்துள்ளது. இன்று 8 பேர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. இன்று 984 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 08ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று மட்டும் சென்னையில் 4,531 பேருக்கும், செங்கல்பட்டில் 1,039 பேருக்கும், திருவள்ளூரில் 514 பேருக்கும், கோவையில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 257 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 333

0

0