சென்னையில் குறைகிறதா கொரோனா…? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பதில்

23 May 2020, 6:00 pm
Radhakrishnan update360
Quick Share

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் கொரோனா நோயாளிகள் இருக்கும் இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அங்குள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் போன்ற மண்டலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். இந் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மணலி, மாதவரம், அம்பத்தூர், தண்டையார்பேட்டை, ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் மண்டலங்களிலும்  குறைந்து வருகிறது.

குடிசை பகுதிகளிலும் நோய்த்தொற்றை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், சவாலான பகுதிகளான ராயபுரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நோய்த்தொற்றை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எங்கு சென்றாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply