கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை

4 March 2021, 11:10 am
radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வந்து விடக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 75 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். அதேபோல, முன்களப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முதியவர்கள், இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 1000 தெருக்களில்தான் 5 முதல் 6 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறையாமல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு தான் தொற்று அதிகம் ஏற்படுகிறது. பஸ்ஸில் பயணம் செய்பவர்கள், ஓட்டல்கள், புத்தக கண்காட்சியில் கூட பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை. தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம், என்று தெரிவித்துள்ளார்.

Views: - 13

0

0