கொரோனாவால் உயிரிழந்த வெளிமாவட்ட நபர் : கோவையில் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரி மகன் மனு!!

11 May 2021, 1:19 pm
Corona Dead - Updatenews360
Quick Share

கோவை : கொரோனாவால் நேற்று மாலை உயிரிழந்த திருப்பூர் மடத்துக்குளம் சேர்ந்த நபரின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரி உறவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் முகமது. இவர் கொரோனாவால் நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் உள்ளூரில் அதிகளவு ஏற்படும் இறப்பை காரணம் காட்டி, இங்குள்ள கபர்ஸ்தானில் இடம் வழங்காததால், தொடர்ந்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இடம் ஒதுக்க வேண்டும் என அவரது மகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கொரோனாவால் உயிரிழக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் உடல் அடக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

மதுக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கபர்ஸ்தானை, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், வெளிமாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்கு வந்து இறப்போரின் உடலை அடக்கம் செய்ய போதிய வசதிகள் செய்து தரக்கோரி பாப்புலர் பிரண்ட் அமைப்பினரும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 152

0

0