மதுபானங்கள் மீதான கொரோனா வரியை மேலும் 2மாதம் நீட்டிப்பு
30 November 2020, 11:02 pmபுதுச்சேரி: மதுபானங்கள் மீதான கொரோனா வரியை மேலும் 2மாதம் நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை உயரத்தப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் கொரோனா வரி முடியவடைய உள்ள நிலையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி தலமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை ரத்து செய்து பழைய விலைக்கு விற்பனை செய்வதென முடிவெடுத்து அதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அடுத்த 2மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை மேலும் 2மாதங்களுக்கு (31.01.2021) வரை நீட்டித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
0
0