கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை : எல்லையில் தீவிர கண்காணிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2021, 1:47 pm
Karnataka TN Border Corona - Updatenews360
Quick Share

ஈரோடு : தாளவாடி அருகே கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு தீவிர கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை கட்டுபடுத்த ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி பால், மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக பகுதியான ஈரோடு மாவட்ட எல்லைக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி மாநில எல்லை பகுதியான தாளவாடி அடுத்த பாரதிபுரம், கும்டாபுரம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் மருத்துவ குழு மற்றும் காவல் துறை சார்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகவில் இருந்து தமிழகத்திக்குள் நுழையும் நபர்களிடம் 72 மணி நேரத்திக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இல்லை என்றால் மருத்துவ குழு மூலம் அங்கேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 551

0

0