வங்கி துணை மேலாளருக்கு கொரோனா : மூடப்பட்ட எஸ்பிஐ வங்கி

Author: kavin kumar
11 January 2022, 2:37 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கலில் ஸ்டேட் பாங்க் கிளை வங்கி துணை மேலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி கிளை இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் R.M காலனி பிரதான சாலையில் ஸ்டேட் பேங்க் வங்கியின் நேருஜி நகர் கிளை செயல்பட்டு வருகிறது. வங்கியில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் இருந்து தினந்தோறும் வந்து செல்லும் வங்கி துணை மேலாளர் ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இன்று வங்கி கிளை மூடப்பட்டது. மேலும் உடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சளி மாதிரிகளை எடுத்து வருகின்றனர். வங்கி மூடப்பட்ட காரணத்தினால் வழக்கம்போல் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் தங்களது பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Views: - 280

0

0