கோவில்பட்டியில் உச்சம் தொடும் கொரோனா : டிஎஸ்பி, ஆசிரியர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா!!

12 April 2021, 2:13 pm
Kvp Corona -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி .எஸ்.பி, நகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர், எட்டயபுரத்தில் 2 ஆசிரியர்கள் உள்பட 6 பேர், கயத்தார் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 3 பேருக்கும் என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2வது கட்ட கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டி.எஸ்.பி (கலைக்கதிவரன்) உடல் நிலை பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அவருக்கு கொரோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து டி.எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள அவரது அறை மூடப்பட்டுள்ளது. மேலும் டி.எஸ்.பி. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பு இருந்தவர்கள் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் பணியாற்றி வரும் அலுவலர்(சேகர்) என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் நகரமைப்பு பிரிவில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அறை மூடப்பட்டது.
மேலும் கிருமி நாசினி தடுப்பு மருந்த தெளிக்கப்பட்டது. இதே போன்று எட்டயபுரத்தில் ஆசிரியர்கள் இருவர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கயத்தார் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 72

0

0