புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் இன்று ரத்து: மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை..!!

22 June 2021, 9:28 am
Quick Share

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நகர்மன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை சுகாதார பணிகள் துணை இயக்குனர் பகுதிக்குட்பட்ட இடங்களில் அனைத்து வட்டாரங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது.

Corona_Vaccine_UpdateNews360

2,000 தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே கையிருப்பு உள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதேபோல 50 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம்கள் இன்று கிடையாது. முன்னெச்சரிக்கையாக இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 93

0

0