மின் விளக்கு இல்லை..! டார்ச் பிடித்தபடியே தடுப்பூசி செலுத்தும் செவிலியர்கள்.. கோவையில் அவலம்..!
Author: Babu Lakshmanan28 August 2021, 10:01 am
கோவை: பொள்ளாச்சி அருகே தடுப்பூசி மையத்தில் மின் விளக்குகள் இல்லாததால் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அவல நிலை ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று மாலை தொடங்கியது.
மாலை 5 மணிக்கு மேல் இந்த முகாம் தொடங்கியதால், இரவு வரை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் அங்கு மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு 8 மணி வரை செவிலியர்கள் செல்போன் டார்ச் லைட் பிடித்தபடியே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
“மதியம் 2 மணிக்கு தடுப்பு செலுத்துவதாக கூறி விட்டு 4 மணிக்கு தான் மருந்து கொண்டு வந்தனர். மின்விளக்கு வசதி கூட இல்லாமல் ஊசி செலுத்தும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.” என்று பொதுமக்கள் கூறினர்.
0
0