கொரோனா தடுப்பூசி டோக்கன் விநியோகத்தில் குளறுபடி: ஆட்சியரிடம் திமுக கூட்டணி கட்சியினரே புகார்!!

17 June 2021, 8:12 pm
Corona_Vaccine_India_UpdateNews360
Quick Share

கன்னியாகுமரி: கொரோனா தடுப்பூசி டோக்கன் விநியோகத்தில் உள்ள குளறுபடிகளை களையவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்., கம்யூனிஸ்ட் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன்,தங்கமோகன், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, மாநகர செயலாளர் மோகன், மாநகர குழு உறுப்பினர் மரியஸ்டீபன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மாநகர பகுதிகள் மட்டுமல்லாமல் குமரி மாவட்டம் முழுமைக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் பரவலாக்கப்பட்டுள்ளதை பாராட்டுகிறோம். குறைவான டோஸ் எண்ணிக்கையில் நமது மாவட்டத்திற்கு பகிர்ந்தளிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் எளிதாக வழங்க இயலாது என்பது தெரிந்ததே.

ஆயினும் 500 டோஸ் தடுப்பூசியை பெறுவதற்கு தோராயமாக 50,000 நபர்கள் ஒரே மையப்பகுதியில் குவியுகிறார்கள் . இதனால் கொரோனா நோய் தொற்று பரவல் தடையின்றி வேகமாக பரவக்கூடிய ஆபத்து நிலையேற்படுகிறது. அதோடு அதிகாலை 4 மணிக்கே பொதுமக்கள் குவியத் துவங்குவதால் காலை 6 மணிக்குள் டோக்கன் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதனால் 6 மணிக்கு மேல் வருகின்றவர்கள் முறையான அறிவிப்புகள் இல்லாததால் மதியம் வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். முறையான விநியோக திட்டமில்லாததால் பொதுமக்கள் வீணாக அலைக்கழிக்கப்படும் அவல நிலை ஏற்படுகிறது. 500 டோக்கன் விநியோகிக்க வேண்டிய நிலையில் டோக்கன் மட்டும் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதும் மீதி 200 டோக்கன்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மறைமுகமாக வழங்கும் குளறுபடிகள் மிகச் சாதாரணமாக எந்தவித கண்காணிப்புமின்றி கீழ்நிலை ஊழியர்களால் அரங்கேற்றப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் மேற்குறிப்பிட்ட காரண காரியங்களை கவனத்தில் கொண்டு குமரி மாவட்டத்திற்கான குறைந்த ஒதுக்கீட்டு எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை அனைத்துபொதுமக்களையும் குவிய வைத்து சிரமப்படுத்தாமல் சீரான முறையில் வழங்கிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 241

0

0