கொரோனா நோயாளிகளுக்காக புதிதாக 118 ஆம்புலன்ஸ் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

31 August 2020, 12:38 pm
108 ambulance - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக புததாக 118 ஆம்புலன்ஸ் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களை விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக, ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, தமிழக சுகாதார சீரமைப்பு திட்டத்திக் கீழ் ரூ.103 கோடி மதிப்பில் 500 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்கட்டமாக 118 ஆம்புலன்ஸ்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நவீன வசதிகளைக் கொண்ட இந்த ஆம்புலன்ஸில், செயற்கை சுவாசக் கருவி, ஆக்சிஜன் அளவீட்டு கருவி, மின் அதிர்வு சிகிச்சை கருவி உள்ளிட்ட 60 மருத்தவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அவசர கால மேலாண்மையில் தேர்ச்சியடைந்த பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

மக்களின் உயிரைக் காக்கும் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசர கட்டுப்பாட்டு அறைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 15,128 அழைப்புகள் வருகின்றன. கடந்த ஜுலை மாதம் வரையில் சுமார் 25 லட்சம் கர்ப்பிணிகளும், சுமார் 25 லட்சம் சாலை விபத்துக்குள்ளானவர்களும், இதர நோயாளிகள் 50 ஆயிரம் பேர் என மொத்தம் ஒரு கோடியே 20 ஆயிரம் பேர் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையினால் பயனடைந்துள்ளனர்.

Views: - 0

0

0