கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..!!

16 April 2021, 12:59 pm
Kanchipuram kailasanathar temple 1 - updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் கடும பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் சராசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதனைக் கட்டுப்படுத்த, மக்கள் அதிகம் கூடுவதற்கு தடை விதிக்கும் விதமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள் 7 கோவில்கள் மூடப்படுவதாக மத்திய தொல்லியல்துறை அறிவித்துள்ளது. அதாவது, காஞ்சிபுரம் நகரில் உள்ள கைலாசநாதர் கோவில், சுரகேசுவரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர், முத்தீஸ்வரர், மதங்கீசுவரர் ஆகிய 6 சிவாலயங்களும், வைகுண்டப் பெருமாள் கோவில் உள்பட 7 கோவில்களும் மே 15ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

Views: - 44

0

0