தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்..! சேலம், திருவண்ணாமலையில் அதிகம்..! உங்க மாவட்டத்தின் விபரம் தெரியுமா..?

29 June 2020, 7:56 pm
Corona_UpdateNews360
Quick Share

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. பின்னர், அந்தப் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

கடந்த 9 ஆம் தேதி தமிழகத்தில் 201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே இருந்தது. இந்த நிலையில், தற்போது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 104 பகுதிகளும், சேலத்தில் 84 பகுதிகளிலும், திருவண்ணாமலையில் 72 பகுதிகளிலும், கடலூரில் 64 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply