COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்..

16 January 2021, 9:55 am
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் பழனிசாமி, மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

கோவிட் – 19 தடுப்பு ஊசி தொடக்க நிகழ்வின் மு க்கிய விபரங்கள்

  • இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
  • மதுரையிலிருந்து தமிழக முதல்வர் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்பு.
  • தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது.
  • முதல் தடுப்பு ஊசியை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் போட்டுக்கொள்கிறார்.
  • முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்பு.
  • ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது.
  • மதுரை மாவட்டத்தில் 8 ஆயிரம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது.
  • மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது.
  • முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது
  • கோவிட் – 19 தடுப்பு ஊசி பல்வேறு கட்டங்களாக ஒத்திகை பார்க்கப்பட்டது.
  • தமிழகத்திற்கு தேவையான 5.36 இலட்சம் கோவிஷுல்டு மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு ஊசிகள் உள்ளன.
  • இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது.
  • ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன.
  • ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும்.
  • கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது.

Views: - 0

0

0