ஒரு ரூபாய்க்கு முடி வெட்டுவதாக மக்களை ஏமாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் : ஆட்சியரிடம் புகார் மனு..!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2021, 1:15 pm
One Rupee - Updatenews360
Quick Share

கோவை : கார்ப்பரேட் நிறுவனங்கள் சலூன் கடைகள் வைத்து ஒரு ரூபாய்க்கு முடிதிருத்தம் செய்வதாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு மருத்துவ சங்கத்தினர் குற்றம் சாட்டி புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், ஏற்கனவே சலூன் தொழிலில் கார்ப்பரேட்டுகள் நுழைந்து எங்களது வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் ஒரு கார்ப்பரேட் சலூன் கடையில் ஒரு ரூபாய்க்கு முடி வெட்டுவதாக பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். கடைக்குள் நுழைந்து 3 ஆயிரம் ரூபாய் வரை பில் போடுகின்றனர்.

கோடிக்கணக்கில் செலவு செய்து சலூன் கடைகளை வைத்து விட்டு மக்களை ஏமாற்றும் நோக்கில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வாறு நடந்து கொள்வது சாதாரண சலூன் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

இவர்கள் தமிழகம் முழுவதும் பொய் பிரச்சாரம் செய்யக் கூடும் எனவே இதனை தமிழக முதலமைச்சரும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொரோனா தொற்றால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதுபோன்ற கார்ப்பரேட்டுகள் எளியவர்கள் வாழ்வில் நுழைந்து வாழ்வை கெடுக்காமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.” என்றார்.

மனு அளிக்கும் போது மாவட்ட தலைவர் சசிக்குமார், துணைச் செயலாளர் சதீஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 165

0

0