மக்கள் பணியில் களமிறங்கிய மாநகராட்சி ஆணையர் : தூய்மை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு!!
Author: Udayachandran RadhaKrishnan23 September 2021, 12:40 pm
கோவை : கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.
தெற்கு மண்டலம் வார்டு எண்.100க்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், அங்கு தூய்மைப்பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்து வீடுதோறும் குப்பைகளை சேகரிக்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்.
மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும். தூய்மையான மாநகராட்சியாக திகழ தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
தொடாந்து, வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செட்டிபாளையம் முதல் ஈச்சனாரி பிரிவு ரயில்வேகேட் அருகில் பாதாள சாக்கடை பணிகளுக்காக இணைப்புக்குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் சுந்தராஜன், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
0
0