கோவை மாநகராட்சி ஆணையர் வேளாண்மைத்துறை துணை செயலாளராக இடமாற்றம்
29 August 2020, 10:58 pmசென்னை: கோவை மாநகரட்சி ஆணையர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தியில், கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் ஜடாவத் வேளாண்மைத்துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாம் மொழி குறித்த பிரச்னையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் கோவை மாநகராட்சி ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பழனி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயசந்திரபானு ரெட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.