கோவை செல்பி கார்னரில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு : பணியமர்ந்த முதல் நாளில் விறு விறு!!!

16 June 2021, 8:07 pm
Cbe Commissioner Insepction - Updatenews360
Quick Share

கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட குளங்களை மாநகராட்சி ஆணையர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், புனரமைக்கப்பட்டுவரும் வாலாங்குளம் ஆகிய குளங்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்ட உக்கடம்
பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், புனரமைக்கப்பட்டுவரும் வாலாங்குளம் ஆகிய
குளங்கள், மத்திய மண்டலம் கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் களப்பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்
புனரமைக்கப்பட்ட உக்கடம் பெரியகுளத்தினையும், ரூ.31.47 கோடி மதிப்பீட்டில்
புனரமைக்கப்பட்ட செல்வசிந்தாமணி குளத்தினையும், ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்
புனரமைக்கப்பட்டுவரும் வாலாங்குளம் ஆகிய குளங்களை பார்வையிட்ட ஆணையர், குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், சூரிய மின்சக்தி மேற்கூரை அமைப்புடன் கூடிய நிழல் இருக்கைகள் மற்றும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளதையும், மேலும், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், கழிப்பறைகள், திறந்தவெளி உடற்பயிற்சி நிலையங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், பாதுகாப்பு கேமராக்கள், எல்.இ.டி விளக்குகள், பறவைகளை பார்வையிட பார்வை கோபுரம், வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதையும், கரை முழுவதும் இயற்கையான கற்பாறைகள், அழகு செடிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதையும். மிதவை மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, மத்திய மண்டலம் கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு
சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவதன் நேரடி செயல்விளக்கத்தை கேட்டறிந்த பின்னர், களப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.

Views: - 167

0

0