கோவை மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி உதவி ஆணையர் அதிரடி ஆய்வு : முகக்கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை!!

Author: Udayachandran
4 October 2020, 12:26 pm
Fish Market - Updatenews360
Quick Share

கோவை : மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி உதவி ஆணையர் மகேஷ் அதிரடி ஆய்வு செய்து முக கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கோவை உக்கடம் அருகே இயங்கி வரும் மார்க்கெட்டில் இன்று அசைவ பிரியர்கள் ஏராளமானோர் மீன் வாங்க குவிந்தனர். அப்பொழுது கோவை மாநகராட்சியின் உதவி ஆணையர் மகேஷ் ஆய்வினை மேற்கொண்டார்.

மீன் மார்க்கெட்டில் உட்புறங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் முககவசம் அணியாமலும் கையுறைகளை அணியாமலும் மக்கள் குவிந்திருந்தனர். இதனை கண்ட அவர் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

குறிப்பாக கொரோனா தொற்று மக்களிடம் இருந்து விடுபடாத சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றார். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்று தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் விதியை கடைப்பிடிக்காமல் இருப்பது மாநகராட்சியில் பெரும் தலைவலியாக இருக்கின்றன.

நாள்தோறும் கோவையில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வரும் வேளையில் பொதுமக்கள் விதிகளை கடைபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றன. இதனை அடிப்படையாக வைத்து அறிவுரை வழங்கிய உதவி ஆணையர் மகேஷ் பொது இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

Views: - 49

0

0