ஊழலில் திளைத்த ஊராட்சி மன்ற தலைவர் : தட்டிக் கேட்ட துணை தலைவருக்கு கொலை மிரட்டல்… ஆட்சியரிடம் உறுப்பினர்கள் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 4:44 pm
Panchayat President - Updatenews360
Quick Share

கண்டமனூர் ஊராட்சியில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் உறுப்பினர்களுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் கண்டமனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக கௌரி என்பவரும் துணைத் தலைவராக சங்கிலி அம்மாள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் துணைத்தலைவர் சங்கிலி அம்மாள் தலைமையில் 5க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் கண்டமனூர் ஊராட்சியில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று வருவதாகவும் ஊழலை தட்டிக் கேட்டால் ஊராட்சி மன்ற தலைவரின் பெற்றோர் மிரட்டல் விடுவதாக கூறிஇன்று மதியம் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க வந்தனர்.

Views: - 560

0

0