சந்தைகள் திறக்கப்படாததால் அறுப்புக்கு செல்லும் நாட்டு மாடுகள்… அழியும் தருவாயுக்கு செல்லும் அவலம்.. விவசாயிகள் அச்சம்..!!!

6 August 2020, 2:48 pm
Quick Share

கோவை: தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சந்தைகள் திறக்க அனுமதி கோரியும் வருகின்றனர் நாட்டு மாடு விவசாயிகள் மற்றும் காப்பாளர்கள்

கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழகம் எங்கும் பரவலாக மாட்டு சந்தைகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக மாட்டு சந்தைகளில் உழவுக்காவும் பால் உள்ளிட்ட இதர தேவைகளுக்காகவும் விவசாயிகள் வாங்கிக்கொள்வர்.

ஆனால் விவசாயிகள் தற்போதுள்ள சூழலில் சந்தைகள் இல்லாத நிலையில் மாடுகளை பெற சிரமப்படுகின்றனர். குறிப்பாக விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை விவசாய தேவைக்காக கால் நடை வளர்பவர்களிடம் சந்தைகளை நாடி கொடுப்பதையே விரும்புவர். ஆனால் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மாடுகளை விற்பனை செய்ய அவர்கள் சந்தைக்கு செல்ல முடியாததால் இடைத்தரகர்களுக்கு விற்கின்றனர்.

பெரும்பாலும் இவ்வகையான இடைத்தரகர்கள் கூடுதலான பணம் கொடுத்து கால் நடைகளை தங்களின் இறைச்சி வியாபரத்துக்காக கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் விற்பனைக்காகவும் இறைச்சி விறனை நிலையங்களுக்காகவும் தந்துவிடுகின்றனர்.

குறிப்பாக மீன் போன்றவற்றில் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், மாட்டுக்கறிக்கு மவுசு கூடி இருக்கின்றன. இதன் விலையும் எகுறி இருக்கிறது. 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை தற்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கூடுதலான தொகை கொடுத்து விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

அவ்வாறு வாங்கிச் செல்ல கூடிய பெரும்பாலான மாடுகள் நாட்டுரக மாடுகளாகவே இருக்கின்றன. இந்த கோவிட்19 ஊரடங்கின்போது இதுபோன்ற நாட்டு ரக மாடுகள் அறுப்புக்கு சென்று இருப்பதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டு ரக மாடுகளை காண முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

காங்கேயம் உள்ளிட்ட நாட்டு ரக மாடுகள் சந்தைகளில் விவசாயிகளிடம் விற்பதும் வாங்குவதும் ஆக இருந்தது. தற்போது இறைச்சி இடை தரகர்களீன் கையில் சிக்கி இருக்கின்றன. இதனால் அரிய வகை நாட்டு மாடுகள் அனைத்தும் அறுப்புக்கு செல்கின்றன. எனவே நாட்டு மாடுகளின் அழிவை கருத்தில்கொண்டு சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக இயங்கும் வகையில் சந்தைகளை திறக்க அனுமதி வேண்டும் என கால்நடை வளர்பாளர்கள் விவசாயிகள் மற்றும் கொங்கு கோசாலா போன்ற தரப்பின் சார்பாக கோரிக்கை எழுந்து உள்ளது.

குறிப்பாக கொங்கு கோசாலா என்னும் அமைப்பைச் சார்ந்த சிவக்குமார் கடந்த 7 ஆண்டுகளாக நாட்டு மாடு அறுப்புக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கால்நடை வளர்ப்பவர்களிடம் நாட்டு மாடுகளை கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை கடந்த ஏழு ஆண்டுகளாக சுமார் 5000க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை காப்பாற்று இருக்கும் இவரது குழு இந்த பொது ஊரடங்கின் பொழுது இணையத்தின் வாயிலாக சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டு ரக மாடுகள் அறுப்புக்கு செல்வதை தடுத்து நிறுத்தி கால்நடை வளர்ப்பவர்களும் கொண்டு சேர்த்திருக்கிறது.

Views: - 0

0

0