பிறந்தநாள் கொண்டாட்டத்தை தட்டிக் கேட்ட தம்பதி வெட்டிக் கொலை : ஈரோடு அருகே பயங்கரம்!!

14 November 2020, 4:16 pm
Erode Murder - Updatenews360
Quick Share

ஈரோடு : கொடுமுடியில் தம்பதியினரை வெட்டி கொலை செய்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி சிட்டபுள்ளாம்பாளையம் காலனியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரின் பிறந்த நாளை அதே பகுதியில் நள்ளிரவில் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர்.
மதுபோதையில் இருந்த அவரின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும் அதே பகுதியில் வசித்து வரும் ரங்கசாமி – அருக்கானி தம்பதியினர் கண்டித்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் இடையே தகாராறு ஏற்பட்டது.

இதுகுறித்து கொடுமுடி காவல்துறையினர் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். இந்நிலையில் நள்ளிரவில் மீண்டும் வந்த மதுசூதனன் மற்றும் அவரது நண்பர்கள் ரங்கசாமி அவரது மனைவி அருக்கானி ஆகியோரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

சம்பவ பகுதிக்கு வந்த கொடுமுடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பத்தில் தொடர்புடைய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Views: - 23

0

0