இறப்பிலும் இணை பிரியாத தம்பதியினர் : கோவையில் ஒரு சோக சம்பவம்!!

28 December 2020, 12:38 pm
Cuples Dead-Updatenews360
Quick Share

கோவை : அவினாசி அருகே மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏறடுத்தியுள்ளது.

கோவை அவினாசியை அடுத்த நேரு வீதியை சேர்ந்தவர் பெருமாள் மூர்த்தி (வயது 66). அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்றவர். இவரது மனைவி ராதா (வயது 60). வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்த சூழலில், ராதாவுக்கு கடந்த 24ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பெருமாள் மூர்த்தி தனது மனைவியுடன் இருந்து அவரை கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெருமாள் மூர்த்தி உடைகளை எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ராதா உயிரிழந்துவிடவே, அந்த தகவல் பெருமாள் மூர்த்திக்கு போன் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட பெருமாள் மூர்த்திக்கு அப்பொழுதே மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெருமாள் மூர்த்தியின் உயிர் பிரிந்தது.

இதனை தொடர்ந்து, இருவரது உடல்களும் ஒரே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி இறந்த சோகத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0