நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி : நெஞ்சை பதற வைக்கும் காட்சி!!

23 September 2020, 1:43 pm
Accodent CCTV- updatenews360
Quick Share

மதுரை : சோழவந்தான் அருகே மும்முனை சந்திப்பில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளால் வாகன ஒட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சாலையில் அமைந்துள்ள மேலக்கால் மும்முனை சந்திப்பில் வேகத்தடை இல்லாத காரணத்தால் அடிக்கடி வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

இத்தகைய மும்முனை சாலையில் வேகத்தடை அமைத்து விபத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் சாலை சந்திப்பில் சென்ற போது வேகமாக வந்த வேன் ஒன்று தம்பதியினர் மீது மோத வந்தது. உடனே ஓட்டுநர் சாமார்த்தியமாக வாகனத்தை நிறுத்தியதால் கண்ணிமைக்கும் நேரத்தில் நூலிழையில் தம்பதியினர் உயர் தப்பினர். இந்த காட் தற்பே

எனவே சோழவந்தான் மேலக்கால் மும்முனை சந்திப்பில் வேகத்தடை அமைத்து விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Views: - 1

0

0