மகள்களை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

10 July 2021, 6:03 pm
Quick Share

கோவை: மகள்களை கொன்ற குற்றத்திற்காக தந்தைக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்காளிபாளையம் பகுதியில் பத்மநாபன் என்ற மருத்துவ பிரதிநிதி வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹேமவர்ஷினி, ஹர்ஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவர்களுடன் செல்வராணியின் தாயாரான பிரேமா என்ற மூதாட்டியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு பத்மநாபன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்மநாபன் மது குடித்து விட்டு தகராறு செய்த போது அவரது மனைவி மற்றும் தாயார் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

இதனை தொடர்ந்து பத்மநாபன் தூங்கிக் கொண்டிருந்த தனது இரண்டு மகள்களையும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் பத்மநாபனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த கோவை மகிளா நீதிமன்றம் பத்மநாபனுக்கு 10000 ரூபாய் அபராதமும், இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Views: - 194

0

0