பாலியல் புகார்: கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு..!

16 June 2021, 8:36 pm
Quick Share

சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கெபிராஜிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா நகர் பகுதியைச் கெபிராஜ் தனியார் பள்ளிகளில் கராத்தே மற்றும் ஜூடோ பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூடோ பயிற்சிக்காக சென்ற மாணவி ஒருவரை பிற மாவட்டங்களுக்கு போட்டிக்காக அழைத்துச் சென்றபோது கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஒரு முறை நாமக்கல் சென்று வந்த இப்போது அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.பாதிக்கப்பட்ட பெண், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கெபிராஜுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் மகளிர் போலீசார், அவரைக் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கெபிராஜுக்கு எதிரான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.கெபிராஜ் சிபிசிஐடி போலீசார் வசம் உள்ள நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கெபிராஜ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

Views: - 192

0

0