தமிழகத்தில் ஓரிருநாளில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான பரிசோதனை : அமைச்சர் தகவல்!!

6 September 2020, 7:11 pm
Minister Vijayabhaskar -Updatenews360
Quick Share

3ம் கட்ட ஆராய்ச்சிக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான பரிசோதனை தமிழகத்தில் தொடங்கவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நாடுகள் மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத்பயொடெக் நிறுவனம் தயாரித்துள்ள மருந்துகளை 2ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக முதல்வர் முழு தளர்வுகளை அறிவித்த நிலையில் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் . முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நோய் தொற்றைத் தவிர்க்க வேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை., ஆராய்ச்சி மையம் மற்றும் புனேவின் ஷீரம் இன்ஸ்டியூட் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கான 3ஆம் கட்ட பரிசோதனை தமிழகத்தில் தொடங்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 180 பேரின் உடலில் ஊசி மூலம் செலுத்தி கோவிஷீல்டு பரிசோதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 3ஆம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு, தடுப்பு மரந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Views: - 0

0

0