சாலையின் குறுக்கே வந்த மாடு : பைக்கில் வந்த இளைஞர் பலி!!

30 November 2020, 10:52 am
Accident Dead - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : வெட்டுகுழி அருகே சாலையில் மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் அதிவேகமாக வந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் பலியான சம்பவம் குறித் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரையடுத்துள்ள மாத்தார், செம்பிறாவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் 23 வயதான அபிசோன் பொறியியல் படித்துள்ளார். தற்போது அழகியமண்டபத்தில் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று மதியம் திருவட்டாரிலிருந்து அழகியமண்டபம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் வெட்டுகுழி பகுதியில் செல்லும்போது எதிர்பாரத விதமாக மாடு ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது.

இதில் தடுமாறிய இருசக்கர வாகனம் அப்பகுதியிலுள்ள புளியமரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அபிசோன் படுகாயமடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு ஆற்றூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு அனுப்பினர்.

அங்கு சென்ற சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூகவலை தளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 24

0

0