பெண் விஏஓ மீது மாட்டுச்சாணம் வீச்சு.. கள்ளக்குறிச்சியில் மீண்டும் பரபரப்பு!

Author: Hariharasudhan
4 February 2025, 6:51 pm

கள்ளக்குறிச்சியில், பெண் விஏஓ மீது அலுவலகம் புகுந்து மாட்டுச்சாணம் வீசிச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் கிராம நிர்வாக அலுவலராக தமிழரசி என்பவர் உள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்றும் பெண் விஏஓ தமிழரசி பணியில் இருந்துள்ளார். அப்போது, சங்கீதா என்பவர் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து, தமிழரசி மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.

அது மட்டுமல்லாமல், தான் கொண்டு வந்த மாட்டுச் சாணத்தை விஏஓ மீது வீசியுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில், சங்கீதா அதே அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்த நிலையில், அண்மையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், இதனால் ஆத்திரத்தில் இருந்த சங்கீதா, இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்ட விஏஓ மிழரசி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழரசி கூறுகையில், “நான் அலுவலகத்தில் இருந்தேன். திடீரென எனது பின்பக்கத்தில் பார்வையில் தெரியாத மாதிரி உள்ளே வந்த சங்கீதா, ஒரு கவரில் இருந்த மாட்டுச் சாணத்தை எடுத்து எனது முகத்தில் அடித்தார்.

Cow dunk thrown to Kallakurichi VAO

அது மட்டுமல்லாமல், என்னை இழுத்து கீழே போட்டு தாக்கினார். அப்போது, ‘இது என்னுடைய ஊர், நீ எப்படி வேலை செய்கிறாய் என்று பார்க்கிறேன். யார் வந்து உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நான் பார்க்கிறேன். உன்னைல் கொல்லாமல் விடமாட்டேன்’ எனச் சொல்லி கதவை மூடிக்கொண்டு தாக்க ஆரம்பித்தார்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கணவருடன் கண்ணாமூச்சி ஆடிய கள்ளக்காதலன்.. தோட்டத்து வீட்டில் காத்திருந்த மனைவி.. எதிர்பாரா திருப்பம்!

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில், அலுவலகத்தில் வைத்து விஏஓ தமிழரசியை, சங்கீதா பூட்டிவிட்டுச் சென்றதும், இதனை வீடியோவாக எடுத்த வீஏஓ, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Actor Manoj Dharna In Police Station காவல் நிலையம் முன்பு பிரபல நடிகர் போராட்டம்.. கைது செய்ததால் பரபரப்பு!
  • Leave a Reply