கண் முன்னே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பசுக்கள் : பரிதவித்த விவசாயி..!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 1:39 pm
Flood Cow - Updatenews360
Quick Share

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தரைப் பாலத்தை கடக்க முயன்ற பசுமாடுகள் வெள்ளநீரில் அடித்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது இதனால் மலைப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கோம்பையூர், கோம்பை தொட்டி ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக குரும்பூர் பள்ளத்தின் தரைப்பாலம் வெள்ள நீரால் மூழ்கடித்து செல்கிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த தரைப்பாலத்தை சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கடக்க முற்பட்டபோது நீரின் வேகம் தாக்காமல் சுமார் ஐந்து மாடுகள் வெள்ள நீரில் அடித்து சென்றன.

வெள்ள நீரில் அடித்து சென்ற மாடுகளை காப்பாற்ற முடியாமல் மீதமுள்ள மாடுகளை மட்டும் மாட்டின் உரிமையாளர்கள் பாதுகாப்பாக மறுகரைக்கு ஓட்டி சென்றனர்.

நீண்ட நேரம் ஆகியும் வெள்ள நீரில் அடித்துச் சென்ற மாடுகள் கரை ஒதுங்காததால் மாட்டின் உரிமையாளர்கள் வேதனையுடன் திரும்பி சென்றனர்.

Views: - 271

0

0