தமிழகம்

சீமான் முதலில் இதற்கு பதில் சொல்லட்டும்.. முத்தரசன் கேள்வி!

ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவதாக சீமான் கூறுவதை, அவர் ஆட்சிக்கு வந்த பின்பு பார்க்கலாம் என சிபிஐ முத்தரசன் கூறியுள்ளார்.

திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, ஆசிரியர் பரிகாரங்க கூட்டம் கட்சியின், மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முத்தரசன், “1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆன நிலையில், நூற்றாண்டு விழாவைக் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்படுகிறது. கட்சியின் வரலாறு குறித்து மூத்த தலைவர்கள் எடுத்துரைப்பார்கள். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், ஆண்டு முழுவதும் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருக்கிறது.

கட்சியின் வரலாறுகள் முழுவதும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட உள்ளன. திமுக கூட்டணியிலிருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசை. முதலில் அதிமுக எரிந்து கொண்டு இருக்கிறது, அதை அணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும்.திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது என கூறுபவர்கள் யார்? எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, நாங்கள் தெளிவாக இருக்கிறோம், ஒற்றுமையோடு இருக்கிறோம்.

இந்த அணி தொடரும், மேலும் பலப்படும்.ஒட்டுமொத்தமாக காவலர்களை அநாகரிகமாகப் பேசுவது நாகரிகமல்ல. ஒரு விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் அராஜகம் செய்கிறார்கள் என சிலர் கூறுவார்கள். அனைத்து பிரச்னைகளுக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு பிறகு தமிழக அரசின் முக்கியமான 2 பிளான்.. சேகர்பாபு தகவல்!

மற்றவர்களுக்கு வழங்குவது போல் தீபாவளி ஊக்கத்தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும்.ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அதை அவர் ஆட்சிக்கு வந்த பின் பார்த்துக் கொள்ளலாம். தற்போது தமிழ்த்தாயை மதிக்க வேண்டுமா ? வேண்டாமா? தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வேண்டாமா? இதுதான் தற்போதைய பிரச்னை. இதற்கு தான் சீமான் பதில் கூற வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த பயிலரங்தில் மாநில துணைச் செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் சந்தானம், திருச்சி மாவட்டச் செயலாளர் சிவா மற்றும் நிர்வாகி இப்ராஹிம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சட்ட 800 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

15 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

16 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

16 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

16 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

17 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

18 hours ago

This website uses cookies.