குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த திமுக நிர்வாகி : கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Author: Babu Lakshmanan
26 August 2021, 3:14 pm
Quick Share

கன்னியாகுமரி : குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியான திமுக நிர்வாகியை கைது செய்ய கோரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது ; குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றிய திமுக செயலாளர் ஜாண் பிரைட் உட்பட 8 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், அவர்கள் திமுகவினர் என்பதால் இதுவரை கைது செய்யவில்லை.

ஆளும் கட்சி மாவட்ட அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், எனக் கூறினர்.

Views: - 552

0

0