திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாராஜன்(25). இவர் உடன்குடி அனல்மின் நிலைய திட்டப்பணிகளில் பணிபுரிந்து வருகிறார்.
அதே போல் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் வனம்(25). இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரை அழைத்துக் கொண்டு குலசேகரப்பட்டிணம் பகுதிக்கு மேஸ்திரி வேலைக்கு இன்று காலை சென்றுள்ளார்.
இவர்கள் இருவரது வாகனமும் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் மகாராஜன் மற்றும் வனம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வனத்துடன் வந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரப்பட்டிணம் போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மற்றொருவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருசெந்தூர்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.