Categories: தமிழகம்

ATM மெஷினை அறுத்து திருட்டு முயற்சி.. CCTV காட்சிகளை பார்த்து ஷாக் ஆன அதிகாரிகள்..!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஏராளமான தனியார் நூற்பாலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் உள்ளன.

இதில், பணி புரியும் தொழிலாளர்கள் பணம் எடுப்பதற்காக வடமதுரையில் செயல்படும் தனியார் வங்கியின் ஏ.டி.எம் அறை மூனாண்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் முகத்தில் துணியை சுற்றியபடி வந்த மர்ம நபர்கள் 2 பேர் ட்ரிலிங் மிஷினைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை அறுக்க முயற்சி செய்துள்ளனர்.

நீண்ட நேரம் முயற்சி செய்தும் எந்திரத்தை அறுக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக பார்த்த வங்கி மேலிட அதிகாரிகள் இது குறித்து வடமதுரை வங்கிக் கிளைக்கு தகவல் தெரிவித்தனர்.

வடமதுரை கிளை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஏ.டி.எம் எந்திரத்தை அறுக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் எந்திரத்தை அறுக்க முடியாததால் ஏ.டி.எம் உள்ளே வைத்திருந்த பணம் ரூபாய் 4 லட்சத்தி 44 ஆயிரம் தப்பியது.

இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம் எந்திரத்தை அறுத்து பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…

20 minutes ago

பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்!

வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…

32 minutes ago

அண்ணா அறிவாலயத்தில் வானதி சீனிவாசன்… கனிமொழியுடன் திடீர் சந்திப்பு!

அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…

48 minutes ago

மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?

புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…

1 hour ago

இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…

2 hours ago

நீங்கதான் எனக்கு PRECIOUS… தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கட்டளை!

கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…

2 hours ago

This website uses cookies.