புரட்டாசி நிறைவடைந்ததால் அசைவ பிரியர்கள் ஆனந்தம் : மீன் மார்கெட்டில் குவிந்த கூட்டம்!!

18 October 2020, 11:13 am
Tirupur Fish Market - Updatenews360
Quick Share

திருப்பூர் : புரட்டாசி மாதம் நிறுவடைந்ததை முன்னிட்டும், ஞாயிற்றுகிழமை என்பதாலும், திருப்பூர் – தென்னம்பாளையம் மீன் மார்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பூர் – தென்னம்பாளையம் பகுதியில் மீன் மார்கெட் செயல்பட்டு வருகிறது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் மீன் வாங்கி செல்வர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், புரட்டாசி மாதம் நிறைவடைந்த காரணத்தினாலும் பொதுமக்கள் அதிகளவில் மீன் வாங்க குவிந்தனர்.

இதன் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படாமல் நெருக்கியடித்து மீன்களை வாங்கினர். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. பாதுகாப்பு பணியில் போதுமான போலீசார் ஈடுபடுத்தபடவில்லை. அனைத்துவகையான மீன்களும் கிலோ 100 முதல் 600 வரை விற்பனை செய்யப்பட்டது.