சி.ஆர்.பி.எஃப் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..! சென்னையில் அதிர்ச்சி

8 September 2020, 3:34 pm
Quick Share

சென்னையில் சி.ஆர்.பி.எஃப் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி மத்திய ரிசர்வ் படை போலீஸ் அலுவலக துணை கமாண்டண்டராக இருந்தவர் ஸ்ரீஜன். இவருக்கும் இவர் வீட்டாருக்கும் இடையே நீண்ட நாளாக மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீஜன் இன்று மத்திய ரிசர்வ் படை போலீஸ் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டுள்ளார்.

சத்தம் கேட்டு வந்த சக காவலர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீஜனை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இவர் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணமா இல்லை பணி சுமை ஏதேனும் இருந்துள்ளதா போன்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அலுவலகத்தில் வைத்து துணை கமாண்டண்டர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0