என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ. ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே உழவர்களின் குறைகளைத் தீர்ப்பது தான்.
கடலூர் மாவட்ட உழவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே என்.எல்.சி நிலப்பறிப்பு தான். அடிப்படை சிக்கலான என்.எல்.சி நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால், எதற்காக உழவர் குறை தீர்க்கும் கூட்டம்? என்.எல்.சி. நிலங்களை பறிக்கவில்லை என்றால், என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால், அது குறித்து விவாதிக்கவே கடலூர் மாவட்ட நிர்வாகமும், ஆட்சியரும் அஞ்சுவது ஏன்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏன்?
என்.எல்.சி நிறுவனமும், அதன் செயல்பாடுகளும் கடலூர் மாவட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரானது. அடக்குமுறைகள், அர்த்தமற்ற தடைகள் ஆகியவற்றின் மூலம் என்.எல்.சிக்கு எதிரான உணர்வுகளைத் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் அனைத்து அடக்குமுறைகளையும் முறியடித்து மக்கள் சக்தி வெற்றி பெறுவது உறுதி என்று பதிவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக வலம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா. எனினும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையும் படியுங்க: ஜெயலலிதாவின்…
விசிக எம்பியும், அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியோது என்னை…
பிரபல நடிகையின் குற்றச்சாட்டு பிரபல மலையாள நடிகையான வின்சி அலாசியஸ் “சூத்திரவாக்கியம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஷைன்…
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-வல்லக்கோட்டை முருகன் கோவில் விவகாரம்…
This website uses cookies.