மலர்போர்வை மூலம் சம்பங்கி சாகுபடி : நவீன தொழில்நுட்பத்தால் அதிக லாபம் பெறும் விவசாயிகள்!!

30 October 2020, 2:46 pm
Tuber Rose - Updatenews360
Quick Share

ஈரோடு : நவீன தொழில்நுட்பமாக மலர்போர்வை மூலம் சம்பங்கி மலர் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாக சத்தியமங்கலம் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகளவில் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் அதிகளவில் சம்பங்கி பூக்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் சம்பங்கி பூக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதோடு அதிக வருமானம் ஈட்டித் தரும் மலர் பயிர்களில் சம்பங்கி பூ முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தில் நிலப்போர்வை விவசாயம் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது எனவும் நிலப் போர்வை போர்த்துவதன் மூலம் களைகள் எடுப்பதன் அவசியம் இல்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சொட்டு நீர்ப் பாசன முறையைப் பின்பற்றி சம்பங்கி பூக்களை சாகுபடி செய்வதால் எப்பொழுதும் செடிகள் பசுமையாகவே இருக்கும் எனவும் இதனால் சம்மங்கி பூக்களில் எந்தவித நோய்களும் தாக்குவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற நிலப்போர்வையை பயன்படுத்தி சம்பங்கி சாகுபடி செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

Views: - 32

0

0