ஊரடங்கு போட்டும் பெருகும் மக்கள் கூட்டம் : காய்கறி சந்தை வேறு இடத்திற்கு மாற்றம்!!

By: Udayachandran
11 May 2021, 10:27 am
Market Change - Updatenews360
Quick Share

தேனி : கொரோனா நோய்தொற்று பரவலின் இரண்டாம் அலையை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் இட நெருக்கடியில் செயல்பட்டு வந்த நகராட்சி காய்கறி மார்கெட் இன்று முதல் பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொடரின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூல்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க ஊராடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் பெரியகுளம் தென்கரை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 200க்கும் மேற்பட்ட காய்கறிகடைகள் நெருக்கடியான பகுதியில் இயங்கி வந்தது.

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டிய சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் பெரியகுளம் தென்கரை பகுதியில் இயங்கி வந்த காய்கறி மார்கெட்டை இன்று முதல் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

காய்கறி வாங்க வரும் பொது மக்கள் அனைவருக்கும் வெப்பமானியை கொண்டு உடல் வெப்பத்தை பரிசோதித்து கிருமி நாசினி தெளித்து காய்கறிகளை வாங்க அனுமதிக்கின்றனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறி வாங்கி செல்லும் விதமாக கட்டமைக்கப்பட்டு காவல்துறையினரின் பாதுகாப்புடன் பெரியகுளம் நகராட்சி நிர்வாத்தினர் அறிவுறித்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Views: - 159

0

0