இரவு 12 மணி வரை இங்கேயே இருக்கேன், தைரியம் இருந்தா வந்து பாரு : திமுகவுக்கு சவால் விட்ட சி.வி.சண்முகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2022, 6:02 pm
CV Shanmugam -Updatenews360
Quick Share

விழுப்புரம் : நீட் தேர்வில் திமுக நாடகம் நடத்துவதாகவும் நீட் தேர்வு குறித்து நேரிடையாக விவாதிக்க தயாரா என சவால் விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் நீட் குறித்து நேரடி சவாலில் பேச  தயங்குவதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கேள்வி எழுப்பினார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அவர் அராஜகத்திற்கும், கட்டப்பஞ்சாயத்திற்கு இடம்கொடுக்காமல், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கிற கட்சியாக உள்ளதால் அதிமுக கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் ஆளும் திமுக ஆட்சியில் திமுக சட்ட விதிகள் படி கலைஞர் கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் முதலமைச்சராகியுள்ளதாகவும் அவருக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர்  முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின்  தேர்தலில் வாக்குறுதிகள் எத்தனை கொடுத்தோம் என்று அவருக்கே மறந்துவிட்டதாகவும், எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நகரமன்ற தேர்தலுக்கு பிறகு தான் முழுமையான ஆட்டம் திமுக  இருக்க போவதாகவும், திமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து ரவுடிசம் எல்லாம் 8 மாதத்திலேயே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தை ஆளத்தெரியாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புகள் தரமற்றதாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கு பணமில்லை என கூறும் முதலமைச்சர்  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமாதி அமைக்க பணம் மட்டும் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

திமுக நாட்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து கொண்டு இருப்பதாகவும்,  நீட் தேர்விற்கு சீராய்வு மனு திமுக அரசு தாக்கல் செய்யவில்லை எனவும், நீட் தேர்வில் திமுக நாடகம் நடத்துவதாகவும் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நீட் தேர்வு குறித்து நேரிடையாக விவாதிக்க தயாரா என சவால் விடுத்த அவர் ஏன் நீட் குறித்து நேரடி சவாலில் பேச ஸ்டாலின் தயங்குகிறார் என கேள்வி எழுப்பினார்.

மேலும் திமுகவின் கைபாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம் செய்தார்.

பிரச்சார மேடையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசும் போது திடீரென ஒருவர் ‘பேசுவதை நிறுத்து‘ என  கூச்சலிட்டத்தால் அதிமுகவினரை மிரட்ட திமுக  நினைக்க வேண்டாம் திமுகவினர்  ஒருதனுக்கு பிறந்து இருந்தால் இந்த மேடையில் 12 மணி வரை நிற்க தயார் தைரியம் இருந்தால் வா என முன்னாள் அமைச்சர் சவால்விட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

Views: - 515

0

0