செல்பேசி அடிமை (Mobile Addiction) சிக்கல் தற்போது ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தில் (Gaming Addiction) கொண்டு வந்து விட்டுள்ளது என மனநல மருத்துவர் கீதாஞ்சலி கூறியுள்ளார்.
செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினம் உலக அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நாளை இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது. அதன் பொருட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவமனையின் மனநலத்துறை தலைவர் டாக்டர் கீதாஞ்சலி, டாக்டர் ஜான் சேவியர் சுகதேவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டாக்டர் கீதாஞ்சலி, பள்ளி மாணவர்களிடம் தற்கொலை தொடர்பான விஷயங்களை நேரடியாக பேசக்கூடாது. நேர்மறையான சிந்தனைகள் குறித்து அவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுக்கான பிரச்சனைகளை உடனடியாக யாரிடம் பேச வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அதன் மூலமாகத்தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க இயலும். இவர்களில் சிலருக்கு வீட்டிலும் மேலும் சிலருக்கு பள்ளியிலும் பிரச்சனைகள் இருக்கலாம். அதனை பெற்றோரோ ஆசிரியரோ கண்காணித்து சரி செய்ய வேண்டும்.
குழந்தைகளிடம் உத்தரவிடும் மனப்பான்மையில் நாம் அணுகுவது கூடாது. ‘நான் சொல்வதைக் கேளு, வாயை மூடு’ என்பது போன்று பேசுவது தவறு. இதனால் குழந்தைகளுக்கு பகுத்தறியும் மனப்பான்மை குறைந்துவிடும். தங்களது செயல்களுக்கான தீர்வினை அவர்களே கண்டறிவதற்கான வழிமுறைகளை அறியும் வண்ணம் அவர்களை வழிநடத்த வேண்டும்.
எதிர்மறையான சிந்தனைகளுக்குள் மாணவர்களை நாமே தள்ளி விடக்கூடாது. எதையும் ஆராய்ந்து அறியக்கூடிய பேச்சுத் திறமையை உரையாடலை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். இதன் மூலமாக எதிர்காலத்தில் அவர்கள் முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
அதேபோன்று ‘மொபைல் அடிக்சன்’ தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுக்கு செல்பேசி பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலை இருந்தது. அது தற்போது பெரும் சிக்கலாக மாறி உள்ளது.
இந்த மொபைல் அடிக்சன் சிக்கல் தற்போது ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது. சில குழந்தைகள் எல்லாம் மொபைல் மூலம் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் எல்லாம் கேம் விளையாடுகிறார்கள். மொபைலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மனநல பிரச்சினை ஏற்படுவதாக உலகளாவிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மன அழுத்தம் அதிகரித்து கற்றல் திறன் குறையும் நிலை ஏற்படுகிறது. அண்மையில் கொரியாவில் கூட குழந்தைகள் மொபைல் போனை 12 வயது வரை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் குழந்தைகள் சூதாட்டத்திலும் ஈடுபடுகிறார்கள்.
மேலும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக அதற்கும் அடிமையாகும் நிலை ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் தவிர்க்கச் செய்ய பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. ஒரு விஷயத்தில் பெற்றோர்கள் காட்டும் உறுதி என்பது எப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.
செல்பேசி, ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமானால் பள்ளிப் பாட புத்தகங்கள் தவிர மற்ற புத்தகங்களையும் வாசிக்க பழக்க வேண்டும். இது போன்ற வாசிப்பு பழக்கத்தின் மூலமாக குழந்தைகளின் எண்ண ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும்.
நிறைய பள்ளிகளில் தற்போது நூலகல் உருவாக்கப்பட்டுள்ளன அங்கிருந்து நூல்களை வீட்டிற்கு கொண்டு செல்வதற்கும் பள்ளி நிர்வாகம் ஊக்குவித்து வருகின்றன. இது வரவேற்கத்தக்கது.
குடும்ப பிரச்சினை உடல் நல சிக்கல் ஆகியவை காரணமாக தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப பிரச்சினை 30%, உடல் நலக் கோளாறுகள் 18% என தற்கொலைக்கான காரணங்கள் உள்ளன.
அதேபோன்று ஒரு பிரச்சனை தான் என்று நம் குறிப்பிட்டு சொல்ல முடியாது பல்வேறு பிரச்சனைகளின் வாயிலாக தற்கொலை நிகழ்வுகள் நடைபெறுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும் காதல் தோல்வி, வருமானப் பிரச்சனை, வேலையின்மை போன்றவையும் தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளன.
இதற்கு சமூக பங்களிப்பு மிக மிக அவசியம் குறிப்பாக ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பு தவிர்க்க இயலாதது ஆகும். ஒவ்வொருவரும் எவ்வாறு தங்களது பங்களிப்பு செய்ய முடியும் என்பதை பார்க்கும்போது தற்கொலை எண்ணத்தை தடுப்பதை ஒரு சமூக இயக்கமாக மாற்ற முடியும் என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.