தந்தை இறந்ததால் மனமுடைந்த மகள்: தற்கொலை செய்து கொண்ட சோகம்!!

19 June 2021, 12:26 pm
Daughter Suicide - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே தந்தை இறந்த சோகத்தில் மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த வீராட்சி மங்கலம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 65) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் காளீஸ்வரி (வயது 38). இவர் கணவர் சிவசாமியை பிரிந்து இரு குழந்தைகளுடன் கடந்த 5ஆண்டுகளாக தந்தை வேலுசாமி வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் காளீஸ்வரி தந்தை வேலுசாமி உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்துள்ளார். தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு காளீஸ்வரி வீட்டருகே செல்லும் வாய்க்கால் அருகே திடீரென தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். தீ கொழுந்து விட்டு எறியும் போது காளீஸ்வரி அலறி சத்தம் போட்டார்.

அப்போது காளீஸ்வரியின் மகள் தனது தாய் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது உடல் முழுவதும் தீ எரிவதை கண்டு சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Views: - 257

0

0