கள்ளக்காதலை துண்டிக்க விரும்பாத மகள் : தந்தையே வெட்டிக் கொன்ற பரிதாபம்..நெல்லையில் அரங்கேறிய கொடூர சம்பவம்!!

24 June 2021, 6:42 pm
Father Kills Daughter - Updatenews360
Quick Share

நெல்லை : கள்ளக்காதலை துண்டிக்காத மகளை தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நெல்லை மாவட்டம் டவுன் அருகே அமைந்துள்ள கிருஷ்ணபேரி பகுதியை சேர்ந்தவர் சேர்மதுரை. இவருடைய மனைவி இசக்கி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சேர்மதுரை கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் இசக்கி கவிதா இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இசக்கி கவிதாவின் தந்தை மற்றும் அவரது கணவர் இந்த பழக்கத்தை விடுமாறு பலமுறை கேட்டு வந்துள்ளனர்.

ஆனாலும் அவர்கள் தங்களின் பழக்கத்தை கைவிட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை இசக்கி கவிதாவின் வீட்டிற்கு இருவரும் வந்ததாக அவருடைய தந்தை மற்றும் கணவருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து இசக்கி கவிதாவின் தந்தை, கணவர் மற்றும் அவருடைய தம்பி நேரில் சென்றனர். மனைவியை அழைத்து இந்த பிரச்சனையை விட்டு விட்டு வாழ வா என்றும், இந்த தொடர்பை துண்டிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த இசக்கி கவிதாவின் தந்தை கையில் வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும் வெட்டினார். இதையடுத்து உயிருக்கு பயந்து இசக்கி கவிதா மற்றும் கள்ளக்காதலன் தப்பியோட, பின்னால் துரத்திச் சென்ற மூவரும் அவர்கள் 2 பேரையும் வெட்டினர்.

அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பார்த்து அனைவரும் தப்பியோட சேர்மதுரை மட்டும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அவரது தந்தை மற்றும் சேர்மதுரையின் தம்பியை தேடி வருகின்றனர்.

கள்ள காதல் விவகாரத்தில் தந்தையே தனது மகளை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 255

0

0