தாவூத் இப்ராஹிம் கூட்டாளி பெங்களூருவில் பதுங்கல்! தமிழக போலீசாரால் சுற்றி வளைப்பு!!

14 October 2020, 2:44 pm
Quick Share

காஞ்சிபுரம் : இலங்கையை சேர்ந்த முக்கிய குற்றவாளியை பெங்களூரில் காஞ்சிபுரம் கியூ பிரிவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இலங்கையில் நடைபெற்ற பல்வேறு கொலைசம்பவங்களில் தொடர்புடைய அழகபெரும்மக சுனில் கெமினி‌ பொன் சேகா ( எ) கொட்டாகெமினி தேடப்பட்டு வந்திருந்தார்.

கடந்த 11 வருடங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்தவர் சென்னை அருகே புதுப்பாக்கம் என்ற பகுதியில் தங்கியிருந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இவர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் போர்ஜரி பாஸ்போர்ட் மூலம் இலங்கையில் இருந்து தமிழகம் வந்ததுள்ளதை கியூ பிரான்ச் மோப்பம் பிடித்து கண்காணித்து வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் (சென்னை) உள்ள புதுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தலைமறைவாக தங்கி இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தார்.

கொட்ட காமினியின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை கைது செய்ய நெருங்கி வந்ததை அடுத்து காஞ்சிபுரம் இருந்து பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பிச்சென்ற கட்ட காமினியை பெங்களூரில் வைத்து இரவு க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தாவூத் இப்ராஹிம் மற்றும் பல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்கார்களுடன் கொட்டகெமினி தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 35

0

0