தினம் தினம் காட்டு யானைகளால் தொல்லை.. மெத்தனப் போக்கில் வனத்துறை : நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள், பொதுமக்கள் சாலை மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 11:12 am
Cbe Mariyal - Updatenews360
Quick Share

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் விவசாயிகளின் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்துவதாக கூறி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மேற்கு தொடர்ச்சிமலையொட்டிய தேவராயபுரம், நரசிபுரம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக 10 க்கு மேற்பட்ட யானைகள் தொடர்ந்து இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வில்லை எனக்கூறியும் ,அதேபோல் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து செய்யாததைக் கண்டித்தும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் விவசாயிகள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

Views: - 494

0

0